எல்லோரும் சைவமாக மாறுங்கள் என உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம்

எல்லோரும் சைவ உணவு முறைக்கு மாறவேண்டும் என உத்தரவுபோட முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் தொடங்கி ஒன்பது நாட்கள் வரையில் நவராத்திரியாக அனைவரும் கொண்டாடுகிறார்கள். பத்தாவது நாள் விஜயதசமி நாளையும் இணைத்து மொத்தம் பத்து நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படும் பெரும்பாளான இந்து மக்கள் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருப்பார்கள், இந்த விழாவிற்காக இறைச்சிக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நவராத்திரி விழாவை முன்னிட்டு, டெல்லி மற்றும் குருகிராமில் இறைச்சிக் கடைகளை அடைக்க வேண்டும் என சில இந்துத்வா அமைப்புகள் நிர்ப்பந்தித்தாக தகவல் வெளியானது. இந்நிலையில் உணவுக்காகவும், தோல் பொருட்களுக்காகவும் இறைச்சி ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த நாட்டில் அனைவரும் சைவம் உணவு முறையைப் பின்பற்றுவர்களாக இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களா என கேள்வி எழுப்பினார். எல்லோரும் சைவத்திற்கு மாறிவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துவிட முடியாது என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

More News >>