நான்தான் மாப்பிள்ளை நான்தான் பொண்ணு-இப்படியும் ஒரு திருமணம்!

உகாண்டாவை சேர்ந்தவர் ஆக்ஸ்போர்டு பல்லைக் கழக மாணவி லுலு ஜெமிமா. இவருக்கு 32 வயசு ஆகி விட்டது ஆனால் கல்யாணம் ஆகவில்லை வீட்டில் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும், தனக்கு கல்யாணம் பிடிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டே இருந்தார் ஆனால் அவரது பெற்றோர் லுலுவிற்கு கல்யாணத்தை பண்ணி பார்க்க ரொம்பவே ஆசைப்பட்டார்கள்.

இந்த நிலையில் தன்னுடைய 32-வது பிறந்த நாள் அன்று மணப்பெண் போல் உடை அணிந்து கொண்டு தனக்குத்தானே கல்யாணம் செய்து கொண்டார். இந்த கல்யாணத்துக்கு பெற்றோர் யாருமே வரவில்லை. தான் தன்னையே சுயமாகவே கல்யாணம் செய்து கொண்ட விஷயத்தை பெற்றோருக்கு போன் பண்ணி சொன்னதும் இதனை கேட்டு பெற்றோர் உட்பட எல்லோருமே அதிர்ச்சியடைந்தனர்.

லுலுவின் கல்யாணமும் மணப்பெண் அலங்கார போட்டோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. லுலுவின் இந்த காரியத்துக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இவர் ஒரு துணிச்சலான பெண்,வெளிப்படையான பெண், பொதுப்படையான எண்ணங்களை உடைத்தெறிய முன்வந்துள்ள பெண் என்றெல்லாம் ஆதரவு வார்த்தைகள் இணையத்தில் பரவி வருகிறது.

இது குறித்து லுலு கூறியது "என்னை நன்றாக பார்த்து கொள்ளும், கவனித்து கொள்ளும், அக்கறையான ஒருவரைத் தான் நான் கல்யாணம் செய்துருக்கிறேன். அதனால எனக்கு கவலையே இல்லை. இன்னையில இருந்து நான் கல்யாணம் ஆனவள். நான்தான் மாப்பிள்ளை, நான்தான் பொண்ணு. நானே மனைவி. நானே கணவன் என்கிறார் லுலு.

More News >>