குழந்தைகள் விரும்பும் இனிப்பு ஆப்பம்..!

குழந்தைகள் விரும்பும் இனிப்பு ஆப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள் :

பச்சரிசி – 3 கப்

புழுங்கல் அரிசி – 2 கப்

உளுந்து – 1 கப்

வெந்தயம் – 4 டீஸ்பூன்

வெல்லம் – 350 கிராம்

சோடா உப்பு – சிறிதளவு

ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்

இளநீர் – அரை டம்ளர்

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகிய எல்லாவற்றையும் சேர்த்து 6 மணி நேரம் ஊற வைத்து மென்மையாக அரைக்க வேண்டும். பின் மாவை கரைக்கும் போது வெல்லம், ஏலக்காய்த்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

பின்னர் மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் இளநீர் ஊற்றி 2 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். பிறகு, மாவில் சிறிது சோடா உப்பு சேர்த்து தோசை மாவை விட தண்ணீராகக் கரைத்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு ஆப்பச் சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும். அதில் ஒரு கரண்டி ஆப்பம் மாவு ஊற்றி, துணியால் சட்டியை இரு புறமும் பிடித்துக் கொண்டு, ஒரு சுற்றுச் சுற்றினால், அதன் மத்தியில் ஊற்றப்பட்டிருக்கும் மாவு, நடுவில் கனமாகவும், ஓரங்களில் மென்மையாகவும் படியும். பின்பு ஒரு தட்டை வைத்து 2-3 நிமிடம் அதை மூடி வேகவைத்து எடுத்தால் சத்தான இனிப்பு ஆப்பம் தயார்.

More News >>