நவராத்திரியின் நான்காவது நாளில் எந்த தெய்வத்தை எப்படி வணங்குவது?

இன்று தேவியை மகாலட்சுமி வடிவத்தில் வழிபட வேண்டும். கிரியா சக்தியான மகாலட்சுமி இன்று தேவர்களின் வாழ்த்து துதியை ஏற்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. எனவே இன்று லட்சுமி, சிங்காசனத்தில் வெற்றி திருக்கோலத்தில் காட்சி அளிப்பது போன்று அலங்காரம் செய்வார்கள்.

செல்வத்துக்கு அதிபதியான இந்த அம்சத்தை செந்தாமரை, ரோஜா மலர்களால் அர்ச்சித்து வழிபடலாம். இன்று அட்சதை கொண்ட படிக்கட்டு போல அமைத்து கோலம் போட வேண்டும். மகாலட்சுமிக்கு தயிர்சாதம், அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு, பொங்கல், கதம்ப சாதம், உளுந்து வடை, பட்டாணி சுண்டல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபாடு செய்ய வேண்டும். பைரவி ராகத்தில் கீர்த்தனைகள் பாடினால் நல்லது. இன்று 5 வயது சிறுமியை 'ரோகிணி'யாக அலங்கரித்து பூஜை செய்து வணங்கினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். இன்று சதுர்த்தி என்பதால் லட்சுமி வடிவத்துக்கு கஸ்தூரி மஞ்சள், முத்து போன்றவற்றால் மாலை செய்து போடலாம். இதனால் பகை விலகும். பழ வகைகளில் கொய்யா படைத்து வழிபடலாம். இது எதிர்ப்புகளை போக்கி இன்னல்களை விலக்கி இன்பத்தை தரும். இன்று ஜவ்வரிசி பாயசம் படைத்து பக்தர்களுக்கு வினியோகம் செய்யலாம். சுண்டல் வகைகளில் மொச்சை சுண்டல் படைத்து வழிபடலாம்.நவராத்திரி நான்காம் நாள்:வடிவம் : நவராத்திரியின் நான்காவது நாள் மகாலட்சுமி வடிவத்தில் அலங்ரித்தல்.திதி : சதுர்த்திபூ: ஜாதி மல்லிநைவேத்தியம் : கதம்பசாதம்கோலம்: மஞ்சள் கலந்த அரிசி கொண்டு படிகட்டு கோலம்ராகம்: பைரவி

More News >>