இன்றைய (13.10.2018) ராசிபலன்கள்
இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடன் இந்நாளைக் கழித்திடுங்கள். இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.
மேஷம்:மேஷ ராசி நேயர்களே, முக்கிய வேலைககள் சீக்கிரத்தில் முடியும். உறவினர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்வர். மனதிற்கு பிடித்ததை மட்டும் செய்யவும். உத்யோகத்தில் வந்த எதிர்ப்புகள் அடங்கும்.
ரிஷபம்:ரிஷப ராசி நேயர்களே, குடும்ப நபர்களிடம் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் தேவை.
மிதுனம்:மிதுன ராசி நேயர்களே, முக்கிய காரியங்கள் விரைவில் கைக்கூடும். குடும்ப பெருமை உயரும். பண சேமிம்பில் கவனம் செல்லும். உத்யோகத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும்.
கடகம்:கடக ராசி நேயர்களே, குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் கூடும். உங்களை நம்பி முக்கிய பொறுப்புகள் தரப்படும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் பொறுப்புகள் தேடி வரும்.
சிம்மம்:சிம்ம ராசி நேயர்களே, குடும்பத்தில் துணிச்சலான முடிவுகளை எடுக்க முடியும். உடன்பிறந்தவர்கள் ஆலோசனை வழங்குவர். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் பல நல்ல சலுகைகள் கிடைக்கும்.
கன்னி:கன்னி ராசி நேயர்களே, விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். பண வரவுக்கு நிறைய வாய்ப்பு உண்டு. தொழில், வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பிக்கும்.
துலாம்:துலாம் ராசி நேயர்களே, பல வேலைகளை ஒரே நேரத்தில் பார்க்க வேண்டி வரும். யாரிடத்திலும் உணர்ச்சி வசப்பட்டு பேச வேண்டாம். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து போகவும்.
விருச்சிகம்:விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்தினர் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். பழைய கடனில் ஒரு பாதி அடைப்படும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து, கௌரவும் உயரும். சிறிய முதலீட்டில் புதுத் தொழில் ஒன்றை தொடங்க முடியும்.
தனுசு:தனுசு ராசி நேயர்களே, தெய்வ பிராத்தனையை நிறைவேற்ற முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சுப நிகழ்ச்சிகள் நல்ல முறையில் நடக்கும். தொழில், வியாபாரத்தில் பெரிய மாற்றம் வரும்.
மகரம்:மகர ராசி நேயர்களே, மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். வெளியூர் பயணங்களை தவிர்க்கவும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
கும்பம்:கும்ப ராசி நேயர்களே, ஆன்மிக எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல் தீரும். நண்பர்களுடன் வீண் விவாதங்கள் வரக்கூடும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
மீனம்:மீன ராசி நேயர்களே, குடும்பத்தை பற்றிய சிந்தனை அதிகமாகும். எடுத்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். உத்யோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.