தேவர் மகன் 2 தான் என் கடைசி படம் - கமல் அதிரடி!

நடிகர் கமல் ஹாசன், இந்தியன் 2 படத்தை தொடர்ந்து தேவர் மகன் 2 படத்தை உருவாக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி, மக்கள் நீதி மய்யம் கட்சி என புதிய அவதாரங்களை எடுத்து வரும் கமல் ஹாசன், ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திலும் நடிக்கவுள்ளார்.

படம் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னரே வெளியாகும், இன்னமும் படப்பிடிப்பு பணிகள் துவங்கவில்லை. இந்நிலையில், இப்படத்தில் அஜய் தேவ்கனுக்கு பதிலாக அக்‌ஷய் குமார் வில்லனாக நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

இந்நிலையில், தந்தி டிவி தொலைக்காட்சியின் விவாத மேடையில், ரங்கராஜ் பாண்டே கேள்விக்கு பதிலளித்த கமல் ஹாசன், தேவர் மகன் 2, இந்தியன் 2 எடுக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும், அதன்பிறகு நடிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

1992ஆம் ஆண்டு பரதன் இயக்கத்தில் வெளிவந்த தேவர் மகன் படம் தேசிய விருதினை வென்றது. இப்படத்தில், சிவாஜி கணேசன், கமல் ஹாசன், ரேவதி, கெளதமி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

தேவர் மகன் 2 படம் அதே கதையை தழுவி எடுக்கப்படுமா அல்லது புதிய கதையில் உருவாகுமா என்பது விரைவில் தெரியவரும்.

அப்போ சபாஷ் நாயுடு படம் அவ்வளவுதானா பிக்பாஸ்?

More News >>