முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்

செய்தி மற்றும் விளம்பரத்துறை முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 58.

பரிதி இளம்வழுதி மாரடைப்பு காரணமாக அடையாரில் உள்ள மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிரி சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்கை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

6 முறை தமிழக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பரிதி இளம்வழுதி 1996 - 2001 காலகட்டத்தில் சட்டமன்ற துணை தலைவராக பதவி வகித்தவர்.

2006 - 2011 திமுக ஆட்சி காலகட்டத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். திமுகவில் இருந்து 2013-ம் ஆண்டு விலகி அதிமுகவில் இணைந்தார்.

பின்னர், டி.டி.வி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியில் இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>