டிஸ்னி நிறுவனம் ரீமேக் செய்யும் அலாவுதின் படத்தின் டீசர்!

பிரபல கார்ட்டூன் கதையான அலாவுதினே தொகுக்கப்பட்டு 1992-ல் வெளியாகி அனைவரின் மனதையும் கொள்ளையடித்த படம் ‘அலாவுதின்’. அனிமேஷன் படமான இதை தற்போது டிஸ்னி ரீமேக் செய்கிறது.

இந்தப் படத்தில் அலாவுதினாக மேனா மஸோதும், இளவரசி ஜாஸ்மீனாக நவோமி ஸ்காட்டும் நடிக்கின்றனர். இதில் வரும் ஜீனி கதாபாத்திரம் 90இஸ் கிட்ஸ் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த ஜீனி கதாபாத்திரத்தில் நடிகர் வில்ஸ் ஸ்மித் நடிக்கின்றார். இவர் ஏற்கனவே சூசைட் ஸ்குவாட், மென் இன் பிளாக் போன்ற படங்கள் மூலமாக குழந்தைகள் மனதை கவர்ந்தவர்.

ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி அனைவரின் மனதையும் கவர்ந்தது. இந்நிலையில் இந்த படத்தின் டீசரை டிஸ்னி வெளியிட்டுள்ளது. இதில் முற்றிலும் புதிய உலகை காட்டியுள்ளனர்.

கனக்கச்சிதமான பின்னணி இசையுடம் பிரமாண்ட உலகை இந்த டீசரில் வெளிக்காட்டியுள்ளனர். இது ஜினியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News >>