ஜனகர் மகாராஜாவான மத்திய அமைச்சர்!

ராம்லீலா நாடகத்தில் ஜனகர் மகாராஜா வேடத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷவர்தன், நடித்ததை பார்த்த பார்வையாளர்கள் வியப்படைந்தனர்.

நாடு முழுவதும் நவராத்திரி என்றழைக்கப்படும் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி டெல்லியில், ராம்லீலா நாடகம் நடத்தப்பட்டது. சீதையின் தந்தையான ஜனகன் வேடத்தில், மத்திய அமைச்சர் ஹர்சவர்த்தன் நடித்தார். அவருடன் இணைந்து டெல்லி பாஜக எம்.எல்.ஏ விஜேந்திர குப்தாவும், அத்ரி மகரிரிஷ வேடத்தில் நடித்துள்ளார்.

இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷவர்தன், "சீதையின் தந்தை ஜனகர் மகாராஜா வேடத்தில் நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. டெல்லியில் உள்ள லவ குஷா ராம்லீலா குழு சார்பில் இந்த நாடகம் நடத்தப்பட்டது."

"எனது சிறு வயதில் செங்கோட்டை மற்றும் சாந்தினி சவுக் பகுதிகளில் நடந்த ராம்லீலா நாடகங்களை பார்த்துள்ளேன். மேடையில் நடிப்பது மறக்க முடியாத அனுபவம்" எனக் குறிப்பிட்டுள்ளார். மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

More News >>