கௌதம் மேனன் படத்தில் இருந்து விஷ்ணு விலகியது ஏன்?
அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு கௌதம் மேனன் இயக்கும் படங்கள் விக்ரமின் துருவ நட்சத்திரம் மற்றும் தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா. இந்த இரு படங்களின் வேலைகளில் கௌதம் மேனன் பிஸியாக உள்ளார்.
இந்நிலையில், கௌதம் மேனன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் பொன் ஒன்று கண்டேன் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் தமன்னா ஜோடியாக ஒப்பந்தமாகி இருப்பதாக செய்திகள் வெளியானது.
ஆனால், கால்ஷீட் பிரச்னை காரணமாக இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக விஷ்ணு விஷால் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.