அக்டோபர் 26ம் தேதி வருகிறான் ஜீனியஸ்!

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜீனியஸ் படம் வரும் அக்டோபர் 26ஆம் தேதி ரிலீசாகிறது.

இப்படத்தை தயாரித்து, நாயகனாகவும் நடிக்கிறார் அறிமுக நாயகன் ரோஷன். படி, படி என்று குழந்தைகளை புத்தகப் புழுக்களாக மாற்றும் சமூக சிந்தனையை மாற்றும் நோக்கத்தில் இப்படத்தை இயக்குநர் சுசீந்திரன் இயக்கியுள்ளார்.

பல முன்னணி நாயகர்கள் நடிக்க மறுத்த நிலையில், ரோஷன் தானே முன்வந்து நடித்துக் கொடுத்துள்ளார் என பட அறிமுக விழாவில் சுசீந்திரன் தெரிவித்தார். அண்மையில் வெளியான ஜீனியஸ் டீஸர் பாராட்டுக்களை பெற்றது.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் சூரியன் எஃப் எம்மில் நேற்று வெளியிடப்பட்டது.

யு/ஏ சான்றித பெற்ற இப்படத்தின் அனைத்து பாடல்கள் அடங்கிய ஜூக்பாக்ஸ் வீடியோ இதோ..

More News >>