தமிழகத்தில் முதன்முறையாக இ-கோர்ட்- திருவண்ணாமலையில் ஆரம்பம்

அமைச்சர் சேவூர் இராமசந்திரன் அவர்கள் தமிழகத்திலே முதல்முறையாக இ-கோர்ட் வசதி தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட நீதிமன்றம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், 475 இ-சேவை மையங்களின் பொறுப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைப்பெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சேவூர் எஸ். ராமசந்திரன் கலந்துக் கொண்டு குத்துவிளக்கு ஏற்றி முகாமை திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், “இந்தியாவில் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் உள்பட அனைத்து நீதிமன்றங்களின் செயல்பாடுகள் குறித்து இ-கோர்ட்டு ஆன்லைன் மூலமாக இணைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வழக்கின் நிலை, நீதிமன்ற உத்தரவுகள், தீர்ப்புகள் உள்பட அனைத்து விவரங்களும் ஆன்லைன் வாயிலாக தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் வழக்கு விவரங்கள் பெறுவதற்கு ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திற்கு வரும் நிலையினை மாற்றுவதற்காக இ-கோர்ட்டு செயல்பாடுகள் இ-சேவை மையங்களில் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மின் ஆளுமை திட்டத்தின் கீழ் செயல்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் 475 பொது இ-சேவை மையங்களில் முதல் முறையாக இ-கோர்ட்டு வசதி திருவண்ணாமலை தான் செயல்படுகிறது” என்றார்.

More News >>