ஜனவரி 3ல் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
சென்னை: அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் ஜனவரி 3ம் தேதி அன்று அதிமுக அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிந்த நிலையில், வரும் ஜனவரி மாதம் 8ம் தேதி சட்டமன்றம் கூட இருக்கிறது. இதை முன்னிட்டு, ஜனவரி 3ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏவாக டிடிவி தினகரன் பதவி ஏற்று முதன்முறையாக சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.