இவ்வருடத்தின் அதிகபட்ச விலை உயர்வு எது தெரியுமா?

அட பெட்ரோல் விலையையும் தூக்கி சாப்பிட்டுவிட்டது தங்கத்தின் விலை அதிகரிப்பு. சென்னையில் தங்கத்தின் விலை நேற்று ஒரு பவுனுக்கு ரூ.280 உயர்ந்து 24 ஆயிரத்து 208க்கு விற்பனை செய்யப்பட்டது இந்த ஆண்டில் இதுதான் அதிகபட்ச விலை உயர்வாகும்.

 சர்வதேச அளவில் கடந்த சில தினங்களாக தங்கத்தின்  விலை உயர்ந்து கொண்டே வருகிறது. உள்ளூரிலும் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகின்றது. இதனால் தங்கத்தின் விலையானது  படிப்படியாக உயர்ந்தது. ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 208-க்கு நேற்று விற்பனை செய்யப் பட்டது. இந்த ஆண்டில் இதுவே அதிகபட்சமான விலை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் நேற்றைய நிலவரப்படி 22 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.24 ஆயிரத்து 208-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 26க்கு விற்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறும்போது, ‘‘அமெரிக்காவில் உள்ள சர்வதேச பெடரல் வங்கியின் வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்து சர்வதேச அளவில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இந் தியாவின் ரூபாய் மதிப்பில் இருந்து சிறிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்ட போதிலும், சர்வதே அளவில் விலை உயர்வால், தங்கம் விலை உயர்ந்துள்ளது.’’ என அறிவித்துள்ளது.

More News >>