நவராத்திரியின் ஐந்தாம் நாளில் எந்த தெய்வத்தை எப்படி வணங்குவது?.

கடந்த நான்கு நாட்களாக அம்மனுக்கு சிறப்பலங்காரம் செய்து மகிழ்ந்தோம். நவராத்ரியின் ஐந்தாம் நாளான இன்று, அம்பிகையை மகேஸ்வரியாக அலங்கரித்து வழிபட வேண்டும். திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு ஆகியவற்றுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளச் செய்தல் வேண்டும்.

 அம்பாளுக்கு, 'மஹதீ' என்று மற்றொரு பெயர் உண்டு. அளவிட முடியாத பெரும் சக்தியாகவும், சர்வமங்களம் தருபவளாகவும், தர்மத்தின் வடிவமாகவும் தாய் திகழ்கிறாள். பட்டாபிஷேக கோலத்தில் காட்சி தருபவளை காண கண் கோடி வேண்டும்.நவராத்திரி பூஜை காலத்தில், ஸ்ரீ தேவியை ஒன்பது மடங்கு அதிகமாக பூஜிக்க வேண்டும் என்ற கருத்துக்கு ஏற்ப கொண்டாடினால், அம்பிகையும் நம்மை கொண்டாடுவாள் என்பது நம்பிக்கை ஆகும்.

கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பயனை பெற, அன்னையின் அருள் பெறுவது அவசியம். அவளின் அருளை பெற, அம்பாள் மகேஸ்வரியை வழிபடுவது சக்தி வாய்ந்தது.

வழிப்பாட்டு முறை:

நவராத்திரி ஐந்தாம் நாள் வழிபாட்டில், ஆரஞ்சு நிறத்தில் உணவையும், பிரசாதத்தையும் தயார் செய்து சாப்பிடுவது, நன்மை பயக்கும். ஆரஞ்சு நிற லட்டு, பழங்களை படையலுக்கு வைத்து சாப்பிடுவது சிறப்பு.

காலையில், பால் சாதம் - பசும்பாலில் குழைய வேக வைத்த சாதத்தைச் சேர்த்து, தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கலக்கவும். நெய்யில் முந்திரி, உலர் திராட்சை வறுத்து சேர்த்தால், தெய்வீக சுவையுடன், பிரசாதம் தயார். இந்த சுவையான பால் சாதம் தவிர, புளியோதரை, உளுந்தன்னம், இனிப்பு, மாதுளம் பழம் கலந்த தயிர் சாதம் படைத்தும் வழிபடலாம்.

மாலையில் மக்காச்சோளம் - வெஜிடபிள் சுண்டல். சோளத்தைச் சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்து, அதில் நறுக்கிய கேரட், வெங்காயம், வெள்ளரிக்காய் சேர்த்து தாளித்து விட, பூஜைக்கு வருபவர்களுக்கு, உற்சாகமாய் அமைந்துவிடும் இந்த பிரசாதம்.

மலர்கள் பாரிஜாத மலர், பவளமல்லி, சாம்பல் நிற இலைகள் கொண்டு பூஜிப்பது, அதிக பலன்களை தரும். பிச்சிப்பூ, மரிக்கொழுந்து, வில்வ இலை போன்றவற்றைத் தூவுவது நல்லது.

கொடுக்க வேண்டிய தாம்பூலம் பதினோரு வகையான மங்கலப் பொருட்கள் கொடுக்க வேண்டும். முக்கியமாய், வெளி குடும்பத்து சிறுமியர் ஒன்பது பேருக்கு, பட்டுப் பாவாடை - சட்டை எடுத்து தானம் செய்வதும், ஐந்து சுமங்கலிகளுக்கு அன்னதானம் செய்து, புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெறுவதும், குடும்பத்திற்கும், பின் வரும் சந்ததியருக்கும் நன்மை நல்கும்.

பாட வேண்டிய ராகம்அடாணா, பஞ்ச வர்ண கீர்த்தனை கோலம் கடலை மாவு கொண்டு பறவையினம் போல போட வேண்டும்.

More News >>