பாகிஸ்தானில் இன்று இடைத்தேர்தல்: பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது

பாகிஸ்தானில் இன்று 35 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் இடைத்தேர்தல் தொடங்கியது.

பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றங்களுக்கும் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் வேட்பாளர்கள் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.இதன்பிறகு, ஒரு தொகுதியை தவிர்த்து மற்ற தொகுதிகளில் இருந்து ராஜினாமா செய்தனர்.

பிரதமர் இம்ரான் கான் அந்த தேர்தலில் 5 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.இதனால், 35 தொகுதிகள் காலியாக இருந்துது. இதையடுத்து, 35 தொகுதிகளுக்கு இன்று (14.10.2018) தேர்தல் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று 35 தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு தொடங்கியது.

இந்த 35 தொகுதிகளில் 11 தொகுதிகள் நாடாளுமன்ற தொகுதிகளும், மீதம் சட்டமன்ற தொகுதிகளும் ஆகும். 35 தொகுதிகளில் 641 வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனர். இறுதியாக, 372 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மேலும், இந்த 35 தொகுதிகிளல் இருந்து மொத்தம் 50 லட்சத்திற்கும் மேல் வாக்காளர்கள் உள்ளனர். இதில், 23 லட்சம் பேர் பெண் வாக்காளர்கள், 27 லட்சம் பேர் ஆண் வாக்காளர்கள் ஆவர்.

ஆளுங்கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் முக்கியமானதாக அமைந்துள்ள இந்த தேர்தலில் வெற்றுப்பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை செய்து வெற்றியை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையே, பாகிஸ்தானில் 5 ஆயிரத்து 193 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 848 வாக்குச்சாவடிகள் மிகுந்த பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More News >>