இன்றைய ( 14.10. 2018) ராசிபலன்கள்
இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடன் இந்நாளைக் கழித்திடுங்கள்.
மேஷம்: மேஷ ராசி அன்பர்களே, குடும்பத்தில் குதூகலம் பூத்துக் குலுங்கும். சாதூர்யமாக பேசி காரியத்தில் வெற்றி காண்பீர்கள். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
ரிஷபம்: ரிஷப ராசி அன்பர்களே, குடும்பத்தில் நல்லது நடக்கும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். அண்டை அயலாருடன் நட்புறவு ஏற்படும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும்.
மிதுனம்: மிதுன ராசி அன்பர்களே, குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் தானாக விலகும். கணவன் மனைவிக்கிடையே அன்பான நிலை காணப்படும். தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும்.
கடகம்: கடக ராசி அன்பர்களே, குடும்பத்தில் சுக சௌக்கியம் உண்டாகும். உடன்பிறந்தோரின் நேசத்தைப் பெறுவீர்கள். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். உத்யோகத்தில் சம்பள உயர்வு கிடைக்கும்.
சிம்மம்: சிம்ம ராசி அன்பர்களே, குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். எப்போதும் நிதானமாக பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். மனம் சந்தோஷம் படியான விஷயங்கள் நடக்கும். உத்யோகத்தில் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும்.
கன்னி: கன்னி ராசி அன்பர்களே, குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போகவும். உறவினர்கள் உங்கள் உதவியை நாடி வருவர். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.
துலாம்: துலாம் ராசி அன்பர்களே, குடும்ப நலனில் அக்கறை கொள்ளவும். தனவரவு கூடும். திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் வரும்.
விருச்சிகம்: விருச்சிக ராசி அன்பர்களே, பயணங்கள் அனுகூலமான திருப்பங்களைத் தரும். நல்லவர்கள் அறிமுகத்தால் நன்மை உண்டு. எடுக்கும் காரியம் சிறிது முயற்சிக்குப் பின் நடைபெறும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.
தனுசு: தனுசு ராசி அன்பர்களே, குடும்ப சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக மாறும். சொந்த விருப்பு, வெறுப்பை வெளிக்காட்டிக்கொள்ள வேண்டாம். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். உத்யோகத்தில் உயர்ந்த நிலைக்கு வர முடியும்.
மகரம்: மகர ராசி அன்பர்களே, எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். உத்யோகத்தில் உங்கள் மதிப்பு வெகுவாக உயரும்.
கும்பம்: கும்ப ராசி அன்பர்களே, உங்கள் திறமைக்குத் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையில் வாக்கு வாதத்தை தவிர்க்கவும். கோர்ட் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். உத்தியோகத்தில் பாராட்டும் கிடைக்கும்.
மீனம்: மீன ராசி அன்பர்களே, குலதெய்வ வழிபாடு சிறப்பான பலனை தரும். மனம் மகிழும்படியான நிகழ்ச்சி நடக்கும். ஆடை, ஆபர்ண பொருள் சேர்க்கை உண்டாகும். கூட்டு தொழில், வியாபாரம் நல்லபடியாக நடக்கும்.