இந்தியில் ரீமேக் ஆகவுள்ள ராட்சசன் !
விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இப்படத்திற்கு கிடைத்த பாராட்டுக்களை தொடர்ந்து, இந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம்குமார், ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் ராட்சசனை இயக்கினார். இப்படத்தில், விஷ்ணு விஷால், அமலாபால், முனிஷ்காந்த், காளி வெங்கட், ராதாரவி, நிழல்கள் ரவி என பலரும் நடித்திருந்தனர்.
பள்ளிக்குச் செல்லும் இளம் பெண்களை கடத்தி கொடூரமாக கொலை செய்யும் மேஜிக் மேன் ராட்சசனை விஷ்ணு விஷால், இயக்குநராக கனவு கண்டபோது சேமித்து வைத்த உலகளவில் உள்ள சைக்கோக்களின் ஆவணங்களை கொண்டு இந்த சைக்கோ ராட்சனை அடையாளம் காண்கிறான். அது ராட்சசனா இல்லை ராட்சசியா என்ற ட்விஸ்ட் கொடுத்து கிளாப்ஸ் அள்ளுகிறார் இயக்குநர் ராம்குமார். மீண்டும் அது ராட்சசன் தான் என ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து சீட் எட்ஜ் த்ரில்லரை பக்கா கமர்ஷியல் பேக்கேஜுடன் கொடுத்து ஆல் செண்டர் ஹிட் அடித்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்ய ஒரு நிறுவனம் முன்வந்துள்ளதாகவும், பாலிவுட்டிலும் விஷ்ணு விஷாலே நாயகனாக நடிக்க அழைத்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கோலிவுட்டில் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்த விஷ்ணுவுக்கு பாலிவுட்டிலும் ரெட்கார்ப்பெட் விரிக்கட்டும்!