காஜல் அகர்வால் யாருக்கு சப்போர்ட்? #Metoo
பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக சொல்வதை தான் வரவேற்பதாகவும், அதேசமயம், இந்த மீடூவை வைத்துக் கொண்டு சில பெண்கள் விளம்பர நோக்கில் செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் நடிகை காஜல் அகர்வால் தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
வெளிநாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் மீடூ விவகாரம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. பாலிவுட்டில், முன்னணி நடிகர்கள் தங்களது புதுப் படங்களிலிருந்து அதன் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் பாலியல் புகார்களில் சிக்கியுள்ளதால் விலகியுள்ளனர்.
ஆனால், இதுவரை கோலிவுட்டில் நடிகர் சித்தார்த்தை தவிர்த்து மீடூவுக்கு கமல் உட்பட யாருமே ஆதரவு தெரிவிக்கவில்லை. ஏனென்றால், இங்கு இந்த விவகாரத்தில் சினிமா துறையே போற்றும் அரசியல் மற்றும் சினிமா செல்வாக்கு வாய்ந்த வைரமுத்து தலை பாடகி சின்மயியால் உருட்டப்பட்டதால் தான்.
இந்நிலையில், குயின் படத்தின் ரீமேக்கில் நடித்து வரும் காஜல் மீடூ விவகாரத்தில் தனது கருத்தை தற்போது பகிர்ந்துள்ளார். இதே குயின் படத்தை பாலிவுட்டில் இயக்கிய இயக்குநர் மீதே கங்கனா ரனாவத் பாலியல் குற்றச்சாட்டு வைத்திருப்பதால், காஜல் அகர்வால் யாருக்கு சப்போர்ட் செய்கிறார் என்பது புதிராகவே உள்ளது.