கண்களுக்கு விருந்தளிக்கும் பலூன் திருவிழா: மெக்சிகோவில் கோலாகலம்
மெக்சிகோ நாட்டில் இன்று 47வது பலூன் திருவிழா வண்ணமயமாக தொடங்கியது.
அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவில் ஆண்டுதோறும் பலூன் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். உலகளவில் பிரபலமான இந்த திருவிழாவில் கியாஸ் பலூன்களை உயரத்தில் பறக்கவிடும் போட்டிகளும் நடத்தப்படுகிறது.
இந்த வண்ணமயமான திருவிழாவை காணவே, வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் பார்வையிடுவதற்காக வந்து செல்கின்றனர்.
அந்தவகையில், இன்று 47ம் ஆண்டாக பலூன் திருவிழா கோலாகலமாக தொடங்கி உள்ளது. வண்ணமயமாக சுமார் 500க்கும் மேற்பட்ட பலூன்கள் வானத்தில் பறந்து பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளித்துள்ளது.
இன்று முதல் ஒரு மாதம் நடைபெறவுள்ள திருவிழாவில், பலூன்களை பறக்கவிடும் போட்டிகளில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை கலந்துக் கொள்கின்றனர். திருவிழாவின் இறுதிக் கட்டத்தில், வெற்றிப்பெறுபவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது.