பெருங்களத்தூரில் அறுப்பின் பண்டிகை
தாம்பரத்தையடுத்த பெருங்களத்தூர் சி.எஸ்.ஐ. தூய யோவான் ஆலயத்தில் அக்டோபர் 14-ஆம் தேதி ஞாயிறன்று அறுப்பின் ஸ்தோத்திர பண்டிகை சிறப்பாக நடைபெற்றது.
அதிகாலை 6:30 மணிக்கு ஆராதனையுடன் பண்டிகை ஆரம்பமானது. பண்டிகை ஆராதனையில் பெருங்களத்தூர் குருசேகர தலைவர் அருட்திரு.ஜி.எஸ்.ஆர். கிருபாகரன் ஆயர் தேவ செய்தியளித்தார். ஏராளமான விவசாய விளைபொருள்கள் காணிக்கையாக படைக்கப்பட்டன.
ஆராதனைக்கு பின் சிறப்பு விற்பனை அரங்குகளை ஆயர் திறந்து வைத்தார். பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இறுதியாக ஏல விற்பனை நடத்தப்பட்டது.
அறுப்பின் பண்டிகையில் பெருங்களத்தூர் குருசேகரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.