இன்றைய (15.10.2018) ராசிபலன்கள்
இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடன் இந்நாளைக் கழித்திடுங்கள்.
மேஷம்:மேஷ ராசி நேயர்களே, குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். நண்பர்களுடன் வீண் விவாதங்களை தவிர்க்கவும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் விருத்தியாகும்.
ரிஷபம்:ரிஷப ராசி அன்பர்களே, யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். பழைய வீட்டை சீரமைக்க வேண்டியிருக்கும். உடன்பிறப்புகளிடம் ஒற்றுமை வளரும். உத்யோகத்தில் மறைமுகப் எதிர்ப்புகள் நீங்கும்.
மிதுனம்:மிதுன ராசி அன்பர்களே, நல்ல காரியங்களை தாமதிக்காமல் செய்ய நினைப்பீர்கள். கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசுவது நல்லது. பண புழக்கம் கணிசமாக உயர தொடங்கும். தொழில், வியாபாரம் பெரியளவில் வளர்ச்சியடையும்.
கடகம்:கடக ராசி அன்பர்களே, குடும்ப விவகாரங்களில் மற்றவர்கள் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். நண்பர்கள் வகையில் நல்ல செய்தி வரும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.
சிம்மம்:சிம்ம ராசி அன்பர்களே, குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படக்கூடும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். உத்யோகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெற முடியும்.
கன்னி:கன்னி ராசி அன்பர்களே, உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன் மனைவி உறவு, அன்பும் அரவணைப்பும் கலந்து காணப்படும். கடன் வாங்கும் சூழ்நிலையை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் கடுமையான போட்டி நிலவும்.
துலாம்:துலாம் ராசி நேயர்களே, குடும்ப பொருளாதாரம் உயரும். கணவன் மனைவிக்குள் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். புது பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.
விருச்சிகம்:விருச்சிக ராசி அன்பர்களே, குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு அங்கீகாரம் கிடைக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திக்க நேரிடும். பூர்விக சொத்து வகையில் பணம் வரும். தொழில், வியாபாரத்தில் நிறைய சாதிக்க முடியும்.
தனுசு:தனுசு ராசி நேயர்களே, குடும்ப பொறுப்புகளை அதிகம் கவனிக்க வேண்டி வரும். வெளிவட்டாரத்தில் உங்கள் அந்தஸ்து கௌரவம் உயரும். கடன் பிரச்னையை சமாளிக்க முடியும். புதிய தொழில், வியாபாரம் நல்ல அனுகூலத்தை கொடுக்கும்.
மகரம்:மகர ராசி அன்பர்களே, பயணங்களால் ஆதாயம் உண்டு. தெய்வ அருளால் எடுத்த காரியத்தில் வெற்றி உண்டகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.
கும்பம்:கும்ப ராசி அன்பர்களே, அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். உத்யோகத்தில் எதிர்பார்த்த மனநிம்மதி கிடைக்கும்.
மீனம்:மீன ராசி அன்பர்களே, குடும்பத்தில் உங்கள் கை ஓங்கிய நிற்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடன்பிறப்பு வகையில் எதிர்பாரா செலவுகள் வரும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.