விநாயகரின் பக்தரானார் தோனி! ஹனுமந்த் சர்மா

இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெற ஐதராபாத்தில் உள்ள விநாயகர் தான் காரணம் ஏன்று சொல்லும் தலைமை அர்ச்சகர்.

கடந்த 2010-ம் ஆண்டுக்கு முன் ஐதராபாத்தில் உள்ள மைதானத்தில் நடந்த கிரிக்கெட் ஆட்டங்களில் எல்லாம் இந்திய அணி தொடர்ந்து தோல்வியைத் தழுவி வந்தது. ஆனால், 2010-ம் ஆண்டு மைதானத்தை ஆய்வு செய்து பார்த்த வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் அரங்கில் ஒரு விநாயகர் கோயில் கட்டினால் வாஸ்து தோஷம் நீங்கும், இந்திய அணி வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மைதான அரங்கில் சிறிய விநாயகர் கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின் அதாவது 2010-ம் ஆண்டுக்குப் பின் நடந்த அனைத்துப் போட்டிகளிலும் இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதலால், தற்போது நடந்து வரும் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறும் என்று அரங்க பராமரிப்பாளர்கள், மைதான பராமரிப்பாளர்கள், ரசிகர்கள், அந்தக் கோயிலின் அர்ச்சகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

ராஜீவ்காந்தி மைதான அரங்கில் இருக்கும் விநாயகர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஹனுமந்த் சர்மா கூறுகையில், இந்தக் கோயில் 2011-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தக் கோயில் கட்டப்பட்டபின், உள்நாட்டு அணியைத் தவிர வேறு எந்த அணியும் வென்றதில்லை.

அதாவது, இந்திய அணியும், ஐ.பி.எல். போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் 2011-ம் ஆண்டுக்குப் பின் இந்த மைதானத்தில் தோற்றதில்லை. உள்நாட்டு அணிகளுக்கு இந்த மைதானம் மிகவும் ராசியானதாகக் கருதப்படுகிறது. வாஸ்து தோஷம் இந்த மைதானத்தில் இருந்ததால், அதை நிவர்த்தி செய்ய இந்த விநாயகர் கோயில் கட்டப்பட்டது.

இந்த கோயில் கட்டப்பட்டபின் நடந்த அனைத்துப் போட்டிகளிலும் இந்திய அணி வென்றுள்ளது. தோனி இந்த மைதானத்தில் விளையாட வரும்போது இந்தக் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தபின் பயிற்சிக்கும் செல்வார், விளையாடவும் செல்வார் எனத் தெரிவித்தார்.

பிள்ளையார், அல்லா, ஏசு என யார் வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம் எங்களுக்கு இந்தியா ஜெயித்தால் போதும் என்பது ரசிகர்களின் எண்ணம்.

More News >>