இனி அலகாபாத் இல்லை பிரயாக்ராஜ்: உ.பி., முதல்வர் அறிவிப்பு
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அலகாபாத் நகரின் பெயர் பிரயாக்ராஜ் என்று மாற்றப்படுவதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பல ஊர்களின் பெயர்கள் அவ்வபோது மாற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் நகரின் பெயர் பிரயாக்ராஜ் என்று மாறுவதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து யோகி ஆதித்யநாத் நேற்று கூறியதாவது: துறவிகள் உள்பட பலரது கோரிக்கையை ஏற்று விரைவில், அலகாபாத் என்ற பெயரை பியாக்ராஜ் என மாற்றப்படும். இதற்கான அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
மேலும், அலகாபாத் நகரின் பெயரை பிரயாக்ராஜ் என துறவிகள் விடுத்துள்ள கோரிக்கைக்கு மாநில கவர்னர் ராம்நாயக் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.