மும்பையில் பரபரப்பு: விமானத்தில் இருந்து தவறி விழுந்த பணிப்பெண் படுகாயம்
மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இருந்து பணிப்பெண் ஒருவர் தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று காலை ஏர் இந்தியா நிறுவனத்தை சேர்ந்த விமானம் ஒன்று பயணிகளுடன் டெல்லிக்கு புறப்பட தயார் நிலையில் இருந்தது.
பயணிகள் அமர்ந்த பிறகு, அனைத்தும் சரியாக உள்ளதா என்று சர்பார்க்கப்பட்டு பினனர் விமானத்தின் கதவு மூடப்பட்டது. ஆனால், கதவு அருகே நின்றிருந்த ஹர்ஷா லோபோ (53) என்ற பணிப்பெண், யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென தவறி வெளியே விழுந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதில், பணிப்பெண்ணின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. பணிப்பெண்ணை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், இந்த திடீர் விபத்து குறித்து ஏர் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோர விபத்தால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.