கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு! கேரளா ராணுவ வீரர் கைது!
சேலத்தில் ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
நேற்றிரவு, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லியை நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. சேலம் - ஈரோடு அருகே ரெயில் சென்றுக் கொண்டிருக்கும் போது அதில் பயணித்த கேரளாவைச் சேர்ந்த அகில் என்ற ராணுவ வீரர் கல்லூரி மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த கேரள மாணவி சேலம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் ராணுவ வீரரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், அவர் உத்தரபிரதேசத்தில் பணியாற்றி வருவதும் போதையில் பயணித்ததும் தெரியவந்தது.