தீபாவளி பலகாரம்: கோதுமை பாதுஷா செய்வது எப்படி.

தீபாவளி வருவதற்கு சில தினங்கள் தான் உள்ளது அதற்குள் தீபாவளி பலகாரங்கள் செய்வது எப்படி என்று பார்ப்போம். 

அனைவருக்கும் பிடித்த கோதுமை பாதுஷா செய்வது எப்படி:

தேவையானவை:

கோதுமை - 1½ கப், சமையல் சோடா - 1/4 டீஸ்பூன், தயிர் - 4 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 2 கப், பால் - 2 டேபிள்ஸ்பூன், நெய் - 6 டேபிள்ஸ்பூன், தண்ணீர் - 1-2 டேபிள்ஸ்பூன், பொரிக்க எண்ணெய் - தேவைக்கு, அலங்கரிக்க பாதாம்,தேங்காய்த் துருவல், பிஸ்தா - தேவைக்கு

செய்முறை:

சர்க்கரையும் தண்ணீரும் சேர்த்துக் கொதிக்கவிட்டு கம்பிப் பாகு பதம் வந்தவுடன் இறக்கவும். வாயகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு,நெய்யைச் சேர்த்து, விரல் நுனியால் உதிரி யாக ஆகும் வரை கலக்கவும். தயிர், சமையல் சோடா இரண்டையும் சேர்த்து நுரைக்க அடித்து, மாவுடன் கலந்து பிசையவும். கூடு மானவரை தண்ணீர் சேர்க்க வேண்டாம். மாவை சிறுசிறு உருண் டைகளாக உருட்டி, உள்ளங்கையில் வைத்து அழுத்தி, கட்டை விரலால் நடுவில் சிறிது அழுத்திய பின் எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுத்து, சூடான சர்க்கரைப் பாகில் அமிழ்த்தி எடுக்கவும். பாதாம், பிஸ்தா அல்லது கலர் தேங்காய்த் துருவல் கொண்டு அலங்கரிக்கவும்.
More News >>