ஏர்டெல்லில் 100 ஜிபி போனஸ் டேட்டா! உங்களுக்கு வேணுமா?
ஏர்டெல் தேங்க்ஸ் மூலம் ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் தன் வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறது ஏர்டெல். இச்சலுகைகள் என்னவென்று பார்ப்போமா.
ஒரு மாதத்திற்கு ரூ.100-க்கும் அதிக கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகை எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படும். வாடிக்கையர்களுக்கு பிரீமியம் டிஜிட்டல் தரவுகள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கப்படும். போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1500 மதிப்புள்ள நெட்ஃபிளிக்ஸ் சந்தா 3 மாதத்திற்கு வழங்கப்படுகிறது. அதோடு, பிளிப்கார்ட் தளத்துடன் இணைந்து ரூ.4,500 மதிப்புள்ள சலுகைகள், 100 ஜிபி போனஸ் டேட்டா பிளிப்கார்ட் பிரத்யேக ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு வழங்கப்படுகிறது. ஏர்டெல் இப்போது ஜீ5 தரவுகளை தனது பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு வழங்குகிறது. இதில் ரூ.199 மற்றும் அதற்கும் அதிக தொகை கொண்ட சலுகைகளை பயனர்கள் தேர்வு செய்ய வேண்டும்.இவ்வாறு தனது சலுகைகளை தெரிவித்துள்ளது.