நவராத்திரியின் ஏழாம் நாளில் எந்த தெய்வத்தை எப்படி வணங்குவது?
நவராத்திரி ஏழாம்நாளில், அம்பாளை வித்யா லட்சுமியாக அலங்கரித்து வழிப்பட வேண்டும். தாமரை மலர் ஆசனம்அமைத்து, அதன் இருபுறமும் யானை பொம்மைகள் வைக்க வேண்டும். அம்பாளின் கையில் ஜெபமாலை, கோடரி, கதாயுதம், அம்பு, வஜ்ராயுதம், தாமரை, வில், கமண்டலம், சூலம், கத்தி, கேடயம், சங்கு, சக்கரம், மணி, அமுத கலசம், பாசம், சூலம் ஆகியவை இருக்க வேண்டும். வெள்ளைத் தாமரை மலர் மாலை சூட்ட வேண்டும்.
மகிஷன் என்ற அசுரனுக்கு பெரிய ராஜ்யம் இருந்தது. ஆனாலும், அவன் தேவலோகத்தின் மீது ஆசை கொண்டு, அதைப் பறித்துக் கொண்டான். சூரியன், சந்திரன், வாயு உள்ளிட்ட தேவர்களுக்கு கூட அங்கு இடமில்லாமல் போனது. முனிவர்களையும் யாகம் செய்யும் இடத்தில் இருந்து விரட்டி விட்டான். இவர்களது வயிற்றெரிச்சல் இணைந்து அக்னியானது. அதிலிருந்து ஒரு பெண் வெளிப்பட்டாள். அவளுக்கு எல்லா தெய்வங்களும் தங்களது ஆயுதங்களைக் கொடுத்தனர். அவள் மகிஷனை ஒழித்து மகிஷாசுரமர்த்தினி என பெயர் பெற்றாள்.
மகிஷாசுரமர்த்தினி கோலத்தை தரிசித்தால், தீய சக்திகளிடம் இருந்து நமக்கு பாதுகாப்பு கிடைக்கும்.
வழிப்பாட்டு முறை
வடிவம் : நவராத்திரியின் ஏழாம் நாளில் வித்யா லட்சுமி உருவத்தில் அலங்கரித்தல் வேண்டும்.
பூஜை : 8 வயது சிறுமியை பிராக்மி மகா சரஸ்வதி, சுமங்கலியாக கருதி பூஜிக்க வேண்டும்.
கோலம் : நறுமண மலர்களால் கோலமிட வேண்டும்.
பூக்கள் : தாழம்பு, தும்பை, மல்லிகை, முல்லை.
நைவேத்தியம் : எலுமிச்சம் பழசாதம், பழ வகைகள், வெண்பொங்கல், கொண்டக்கடலை சுண்டல், பாதாம் முந்திரி பாயாசம், புட்டு.
ராகம் : பிலஹரி ராகத்தில் பாடி பூஜிக்க வேண்டும்.
பலன் : வேண்டும் வரம் அனைத்தும் கிடைக்கும்.