மீடூக்கு எதிராக களமிறங்கும் வீடூ: இது ஆண்களுக்கான இயக்கம் #WeToo
தாங்கள் பணிபுரியும் இடங்களில் ஆண்களால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் தங்களின் வேதனைகளை மீடூ இயக்கத்தின் மூலம் தெரிவித்து வரும் நிலையில், இவர்களுக்கு எதிராக பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் வீடூ என்ற இயக்கத்தை கையில் எடுத்துள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து தொடங்கி தற்போது இந்தியாவிலும் மீடூ இயக்கம் வேகமாக பரவி வருகிறது. இதில், அரசியல் பிரமுகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரையில் அனைத்து துறையிலும் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களின் மன வேதனையை மீடூ என்ற இயக்கம் மூலம் தெரிவித்து வருகின்றனர். இந்த மீடூ இயக்கத்தால் பிரபலங்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் தங்களின் மன வேதனையை பகிர்ந்துக் கொள்ளும் வகையில் வீடூ இயக்கத்தை தொடங்கி உள்ளனர். டுவிட்டரில் வேகமாக பரவி வரும் இந்த இயக்கத்தில், பெண்களால் ஏமாற்றப்பட்ட ஆண்கர் பலர் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.
விடூ இயக்கத்திலும், அரசியல், சினிமாத்துறை முதல் கல்வித்துறை வரையில் பெண்களால் பாதிக்கப்பட்டு பிரபலங்கள் உள்பட சுமார் 1600 பேர் தங்களது சோகத்தை பகிர்ந்துள்ளனர். மீடூவுக்கு எதிராக களமிறங்கியுள்ள வீடூ இயக்கத்தின் மூலம் பல ஆண்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.