வறுத்த மீனை விட சுட்ட மீன்தான் சூப்பர்
வார வாரம் மீன் சாப்பிடுபவர்கள் மற்றும் அடிக்கடி மீன் சாப்பிடுபவர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி. நீங்கள் மீன் சாப்பிடுவது என்று முடிவு செய்தால் அதனை வறுத்தோ அல்லது குழம்பில் போட்டு வேகவைத்தோ சாப்பிடாதீர்கள். ஏனென்றால் அவற்றின் மூலம் நம் உடலுக்கு எந்த பயனும் ஏற்படாது.
அதோடு வாரம் ஒரு முறை சுட்ட மீன் சாப்பிட்டால், அது மூளைக்கு மிக மிக நல்லது.
அது, திறம்பட செயல்பட உதவும் என்பதே. சுட்ட மீனில், ‘ஒமேகா-3’ அமிலம் இருந்தாலும், அதனால், பிரச்சினை ஏற்படாது என்றும், ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ஒவ்வொரு வாரமும், சுட்ட மீன் சாப்பிடும் போது, வாழ்க்கையின் பிற்பகுதியில், நினைவுச் சிதைவு பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும்.
மீனில் உள்ள, ‘ஒமேகா-3’ அமிலத்தால், நோய் எதிர்ப்பு சக்தி கூடி, மூளை பலம் அடையலாம் என, முந்தைய ஆய்வுகளிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, சுட்ட மீன் சாப்பிடுவதன் மூலம், இந்த மகத்துவம் மேலும் அதிகரிக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
‘நாங்கள் சைவர்கள் ஆச்சே, நாங்கள் எப்படி சுட்ட மீன் சாப்பிட முடியும்’ என, சில தரப்பினர் கேட்கலாம். மீனில் உள்ள ஒமேகா -3 அமிலச் சத்து போல, சில வகை விதைகள், பருப்புகள், சில வகை எண்ணெய்களிலும், இந்தச் சத்து உள்ளது. அதைச் சாப்பிட்டால், சைவர்களுக்கு, சுட்ட மீன் சாப்பிட்டதன் பலன் கிடைத்து விடும்.