திமுகவின் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு: அன்பழகன் அதிரடி
திமுக மாநிலங்களவை உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன் அக்கட்சியின் செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிப்பதாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
திமுகவின் மாநிலங்களவை எம்பியாக உள்ள டிகேஎஸ் இளங்கோவன், அக்கட்சியின் செய்தித் தொடர்பு செயலாளர் பதவியில் இருந்து நேற்று இரவு முதல் பதவியிலிருந்து விடுவிக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார்.
திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கட்சியில் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது. கட்சியின் முக்கிய தலைவராக இருந்து வந்த டிகேஎஸ் இளங்கோவம் திடீரென விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால், திமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். டிகேஎஸ் இளங்கோவன் விடுவிக்கப்பட்டதற்கான காரணம் குறித்தும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
இதேபோல், ஊடகங்களில் விவாதங்களை தவிர திமுக சார்பில் சிறப்பு நேர்காணலில் பங்கேற்போரின் பட்டியலை நேற்று வெளியிடப்பட்டது.இதில், க.பொன்முடி, ஆர்.எஸ்.பாரதி, செல்வகணபதி, ஆ.ராசா, ஜெ.அன்பழகன், பழ.கருப்பையா மற்றும் டி.கே.எஸ் இளங்கோவன் உள்பட 7 பேர் அடங்கிய பட்டியலை அக்கட்சியின் தலைமை கழகம் வெளியிட்டது.
திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளர் பொறுப்பிற்கு உடனடியாக வேறு ஒருவரை நியமிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.