வந்தேமாதரம் பாடல் முதலில் எந்த மொழியில் இயற்றப்பட்டது?... நீதிமன்றத்தின் வழக்கு

வந்தேமாதரம் ' முதலில் எந்த மொழியில் இயற்றப்பட்டது என சென்னை நீதிமன்றத்தில் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசப்பற்றுப் பாடல் 'வந்தே மாதரம்' வங்கக் கவிஞர் பக்கிம் சந்த்ரா சட்டர்ஜியால் இயற்றப்பட்டது. வந்தேமாதரம் இயற்றப்பட்டு கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், இந்த பாடல் முதலில் எந்த மொழியில் இயற்றப்பட்டது எனக் கேட்டு, சென்னை நீதிமன்றத்தில் வீரமணி என்பவர் மனு செய்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம்.வி. முரளிதரனிடம் வந்தது. அரசுத் தரப்பில், முதலில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட பின்னரே வங்க மொழியில் வந்தேமாதரம் பாடல் மொழி பெயர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் 11ம் தேதி அட்வகேட் ஜெனரல் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளார்.

பி.எட் படித்துள்ள வீரமணி, அரசுப் பள்ளி ஆசிரியராகும் ஆசையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்றுள்ளார். வந்தேமாதரம் முதலில் எந்த மொழியில் இயற்றப்பட்டது என்றக் கேள்விக்கு வீரமணி வங்க மொழியில் இயற்றப்பட்டதாக பதில் அளித்துள்ளார். ஆனால், பதில் தவறு என ஒரு மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீதிமன்றத்தின் உதவியை அவர் நாடியுள்ளார்.

90 மதிப்பெண்கள் எடுத்தால்,இந்த தேர்வில் வெற்றி பெற்றதாக கருதப்படும் நிலையில் வீரமணி 89 மதிப்பெண்களை பெற்றிருக்கிறார். வங்க மொழியில்தான் முதலில் வந்தேமாதரம் இயற்றப்பட்டது என பதில் அளித்தக் காரணத்தால் ஒரு மதிப்பெண் குறைந்து போனது.

 

More News >>