புத்தாண்டு வாழ்த்துகளால் திணறிய வாட்ஸ்அப்!
புத்தாண்டையொட்டி நள்ளிரவில் ஒருவருக்கொருவர் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், டுவிட்டர் போன்றவை மூலம் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
அதிகமான வாழ்த்துகள் பரிமாறப்பட்டதால், வாட்ஸ்அப் சிறிது நேரம் முடங்கியது. இதனால் அத்தியாவசியமான முக்கியத் தகவல்களை அனுப்ப முடியமால் பலர் சிரமப்பட்டனர்.
இந்நிலையில், மீண்டும் செயல்பட்டத் தொடங்கியதால் பலரும் மகிழ்ச்சியடைந்தனர். வாட்ஸ்அப் முடங்கியது பற்றி ஏராளமானவர்கள் சமூக வலைதளங்களில் கவலை தெரிவித்து, தங்கள் கருத்துகளை பதிவிட்டனர்.
சென்னையில், கடற்கரைகள், நட்சத்திர விடுதிகள், கோயில்கள், தேவாலயங்களில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.
பலரும், மற்றவர்களுடன் கைகுலுக்கியும், உற்சாகமாக ஆடிப்பாடியும் 2018-ஆம் புத்தாண்டை வரவேற்று வாழ்த்துகூறினர்.