நிர்மலா தேவி வழக்கு விசாரணை விரைவில் முடியும்-அமைச்சர் அன்பழகன்
பேராசிரியை நிர்மலாதேவி வழக்கு விசாரணை விரைவில் முடியும் என உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் உறுதி அளித்துள்ளார்.
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக சில தினங்களுக்கு முன்பு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒரு நீண்ட விளக்க அறிக்கையை வெளியிட்டிருந்தார். நிர்மலாதேவி யார் என்று தெரியாது எனவும் , அவரை நானும் ஆளுநர் மாளிகையில் உள்ளவர்களும் சந்தித்தது கிடையாது என்றும் தெரிவித்திருந்தார் .
இது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகனிடம் கேட்ட போது,"நிர்மலாதேவி வழக்கு விசாரணை முடியும் நிலைக்கு வந்திருக்கிறது. ஆளுநர் வெளியிட்ட அறிக்கையால் இந்த விசாரணையில் பாதிப்பு எதுவும் ஏற்படாது. இந்த வழக்கில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது" என திட்டவட்டமாக கூறினார்.