என்னது செக்கச்சிவந்த வானம் படத்தின் கிளைமேக்ஸ் மாறுகிறதா?
வெளிவந்த செக்கச்சிவந்த வானம் படத்தின் கிளைமேக்ஸை மாற்றவுள்ளதாக அரவிந்த்சாமி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில், அரவிந்த்சாமி, அருண்விஜய், சிம்பு, விஜய்சேதுபதி, ஜோதிகா, அதிதிராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், தியாகராஜன் என நட்சத்திர பட்டாளமே இணைந்து வெளியான செக்கச்சிவந்த வானம் மெகா ஹிட்டடித்தது.
சமீபத்தில், படத்தின் சக்சஸ் மீட் ஒன்று போதை ஆறாக ஓடும் அளவிற்கு விடிய விடிய நடந்தது. பாடல் வெளியீட்டு விழாவிற்கு படப்பிடிப்பு பணிகளின் காரணமாக பிசியாக இருந்த விஜய்சேதுபதி வரவில்லை. ஆனால், சக்சஸ் பார்ட்டிக்கு அட்டெண்டன்ஸ் போட்டுவிட்டார்.
அவரை பார்த்த அரவிந்த்சாமி மற்றும் அருண் விஜய் கொலை வெறியில் அவரது கழுத்துக்கு கத்தி வைத்து மிரட்டியவாறு என்ஜாய் பண்ணும் புகைப்படத்தை அரவிந்த்சாமி தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
மேலும், செக்கச்சிவந்த வானம் படத்தின் கிளைமேக்ஸை மாற்றப்போகிறோம் என கமெண்டும் பதிவு செய்திருந்தார்.
செக்கச்சிவந்த வானம் படத்தில் மூன்று கேங்ஸ்டர்களையும் போலீஸ் விஜய்சேதுபதி பிளான் போட்டு கொல்வதாக படம் அமைக்கப்பட்டுள்ளதால், விஜய்சேதுபதியை அண்ணன் தம்பிகள் போடப்போவதாக அவர் தெரிவித்தார்.