8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென் தமிழகத்தையொட்டியுள்ள பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
குறிப்பாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில், இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என தெரிவித்துள்ளது. தமிழகத்தின் ஓரிரு இடங்களில் பலத்த மழை எதிர்பார்க்கலாம் என குறிப்பிட்டுள்ளது.
சென்னை மாநகரை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.