ஆந்திர முதலமைச்சராகும் ஓட்டல் சப்ளையர்!

சந்திரபாபு நாயுடு போன்று தோற்றம் கொண்டிருந்தவரை கண்டுபிடித்த நபருக்கு, இயக்குநர் ராம் கோபால் வர்மா ரூ.1 லட்சம் அளித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து சர்ச்சைகளுக்கு ஆளாகி வருபவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா. இவர் சமீபத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தோற்றம் கொண்டவரை சமூக வலைத்தளங்களில் கண்டுள்ளார்.

அவர் ஓட்டல் ஒன்றில் சப்ளையராக இருந்தார். இதையடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் சந்திரபாபு நாயுடு போன்று தோற்றமளிக்கும் நபரைக் கண்டுபிடித்து தந்தால் ரூ.1 லட்சம் பரிசு அளிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

அவரை தனது ”லட்சுமியின் என்.டி.ஆர்” படத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவாக நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார். இதுகுறித்து வரும் 19ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட ராம் கோபால் வர்மா முடிவு செய்துள்ளார். இப்படத்தை ராகேஷ் ஷெட்டி தயாரிக்க ஜிவி பிலிம்ஸ் வெளியிடுகிறது. இப்படம் என்.டி.ராமா ராவின் மனைவி லட்சுமியை மையமாகக் கொண்டது.

இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரியும் ரோஹித் முதுலயா என்பவர், சந்திரபாபு நாயுடு போன்று தோற்றமளிக்கும் நபரைக் கண்டுபிடித்து ராம் கோபால் வர்மாவிற்கு தகவல் அளித்தார். அதற்கு மிகுந்த நன்றி தெரிவித்த அவர், பணத்தை அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளார்.

More News >>