டெல்லியை முடக்கிய பனிமூட்டம்
டெல்லியில் நிலவும் பனிமூட்டம் காரணமாக விமானம், ரயில் சேவைகள் கடுமையாகப் பதிக்கப்பட்டுள்ளன.
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இதன் தாக்கம் 5.6 - 8 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.
இதனால், விமானம், ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காலை 7.30 மணி முதல் 11 மணி வரை டெல்லிக்கு வரும் விமானங்கள், வேறு விமானநிலையங்களுக்கு திசை திருப்பப்பட்டன.
56 ரயில்கள் தாமதமாக வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 20 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விமானம், ரயில் நிலையங்களுக்கு வந்த பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பனிமூட்டம் காரணமாக டெல்லி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.