மாடல் அழகியின் உயிரை பறித்த முகநூல் நட்பு: கொலையாளி கைது
மும்பையை சேர்ந்த மாடல் அழகி மான்சி தீட்சித் சில திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஐதராபாதை சேர்ந்த முகமது சயீத் என்பவருடன் பேஸ் புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. சயீத் மும்பையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.
சம்பவத்தன்று சயீத், மான்சியை தனது வீட்டிற்கு அழைத்துள்ளளார். அங்கு இருவருக்கும் இடையே நடைபெற்ற வாக்கு வாதத்தில் கோபமடைந்த சயீத், மான்சியை நாற்காலியில் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த மான்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அவரின் உடலை படுக்கை விரிப்பை கொண்டு சுற்றியும், தலை பகுதியை கயிற்றை கொண்டு இறுக்கியும் ஒரு சூட்கேசில் அடைத்து தனது மொபைல் ஆப் மூலம் கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து ஏர்போர்ட் செல்லும் வழியில் ஒரு புதர் பகுதியில் அந்த சூட்கேஸை தூக்கி வீசிவிட்டு காரில் இருந்து இறங்கி தப்பியுள்ளார் முகமது சயீத்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கார் ஓட்டுநர் சம்பவம் குறித்து உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வந்து அந்த இடத்தை ஆய்வு செய்த போது அந்த குறிப்பிட்ட சூட்கேசில் மாடல் அழகி மான்சி தீட்சித்தின் உடல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த ஓட்டுநர் கொடுத்த அடையாளத்தை கொண்டு போலீசார் சயீத்தை கையும் களவுமாக பிடித்து காய் செய்தனர்.
சயீத் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.