ட்ரம்ப் ரசிகர்களுக்கு தனி டேட்டிங் ஆப்! டொனால்ட் டேட்டர்ஸ்
ட்ரம்ப்பின் ஆதரவாளர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாக டேட்டிங் ஆப் ஒன்றை நேற்று தொடங்கினார். இதன் பெயர் டொனால்ட் டேட்டர்ஸ். ட்ரம்ப்பின் அரசியல் கோஷமான Make America Great Again என்பதுபோல Make America Date Again என்பதுதான் இதன்கோஷம், தொடங்கப்பட்ட முதல் நாளே இதன் பயனாளர்களின் விவரங்கள் திருடப்பட்டுள்ளது.
இதன் நோக்கம் தனியாக வாழ்பவர்கள், பழமைவாதிகள் தனக்கான துணையை தேடுவதற்கும் மற்றும் டிரம்ப் ஆதரவாளர்களை இணைக்கும் அமெரிக்க அடிப்படையிலான ஒற்றையர் சமூகம்.
ஆரம்பித்த முதல் நாளில் 1600 க்கும் மேற்பட்ட பயனர்கள் இருந்தனர் என்று தொழில்நுட்ப செய்தி தளம் TechCrunch தெரிவித்துள்ளது.
மேலும் TechCrunch பிரத்தியேக தகவலைக் கூறியது, இந்த செயலியில் யார் வேண்டுமானால் ஹாக் செய்து முழு பயனர் தரவுத்தளத்தை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்று கூறியது.
ஆனால் டொனால்ட் டேட்டர்ஸ்-டேட்டிங் ஆப் (DonaldDaters) வலைத்தளம் "உங்கள் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் பாதுகாப்பாக தனிப்பட்ட முறையில் வைத்திருக்கின்றன" என்று கூறுகிறது.