எங்களை மிரட்டினால் அணு ஆயுதங்கள் பாயும் - வடகொரியா எச்சரிக்கை
வட கொரியாவின் பாதுகாப்பிற்கு மிரட்டல் விடுக்கப்படும் நிலையில் மட்டுமே, தாம் அணுவாயுதங்களைப் பயன்படுத்தப் போவதாக வடகொரிய அதிபர் திரு.கிம் கூறியுள்ளார்.
வட கொரியாவின் அணுவாயுதத் திட்டம் தொடர்பில், உலக நாடுகளிடையே பதற்றம் அதிகரித்து வரும் வேளையில், அவருடைய அந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
ஆனால், வட கொரியாவின் பாதுகாப்பிற்கு மிரட்டல் விடுக்கப்படும் நிலையில் மட்டுமே, தாம் அணுவாயுதங்களைப் பயன்படுத்தப் போவதாக, திரு.கிம் கூறினார்.
மேலும், தென் கொரியாவில் நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள, வட கொரிய அணியை அனுப்புவது பற்றி தாம் பரிசீலித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
அதுபற்றிக் கலந்துரையாட, இரு கொரியாக்களும் விரைவில் சந்தித்துப் பேசலாம் என்றும் கிம் ஜாங் உன் தமது புத்தாண்டு செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.