பஜ்ஜிக்காக ஹோட்டல் ஊழியரைத் தாக்கிய திமுகவினர்!
திமுகவினர் ஹோட்டலில் பஜ்ஜி சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் ஹோட்டல் ஊழியரையும் தாக்கியதாக வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட வைத்தியநாதன் மேம்பாலம் அருகில் உள்ள உணவகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை திமுகவைச் சேர்ந்த கரிமேடு ராஜி, சிலம்பரசன், யுவராஜ் மற்றும் முருகன் ஆகியோர் வடை, பஜ்ஜி என சாப்பிட்டிருக்கிறார்கள்.
ஹோட்டல் ஊழியர் சாப்பிட்டதற்கு பணம் கேட்டபோது நாங்க யார் தெரியுமா? எனக் கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளனர். மீண்டும் இரவு 10 மணி அளவில் திமுக முன்னாள் வட்டச் செயலாளரும், வழக்கறிஞருமான ரஜினி உட்பட சுமார் 10 பேர் வந்து ஹோட்டல் உரிமையாளர் தங்கபாண்டியனை அசிங்கமாகப் பேசியுள்ளனர்.
மேலும் முன்பு வந்தவர்களிடம் சாப்பிட்டதற்குப் பணம் கேட்ட ஊழியர் முருகன் என்பவரையும் அடி நொறுக்கியிருக்கிறார். இது பற்றி முருகன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.
அண்மையில், விருகம்பாக்கத்தில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் திமுகவினர் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்கால் சென்றபோது, அதனைத் தட்டிக்கேட்ட ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியது குறிப்பிடதக்கது.