கீர்த்தி சுரேஷின் 25வது பிறந்தநாள் இன்று!
விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது 25வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.
நடிகை கீர்த்தி சுரேஷ், 2000களில் மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 2013 ஆவது ஆண்டில் கீதாஞ்சலி மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.
கீர்த்தி சுரேஷ், 1992 அக்டோபர் 17ல் பிறந்தார் இவர் சென்னையில் பிறந்தவர். இவரது அம்மா நடிகை மோகனா, அப்பா சுரேஷ். இவரது அம்மா மோகனா பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் பள்ளிப்படிப்பை கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் முடித்தார்.
இது என்ன மாயம் திரைப்படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார் ஆனால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை எனினும் சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்களில் இவர் அடுத்தடுத்து நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். தொடர்ந்து விஜய்யுடன் பைரவா, தனுஷ்சுடன் தொடரி, சூர்யா உடன் தானா சேர்ந்த கூட்டம்’ விஷாலுடன் சண்டை கோழி 2, விக்ரமுடன் சாமி 2, மீண்டும் விஜய்யுடன் சர்கார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடித்த அவருக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.