தீபாவளி ஷாப்பிங்கையும் விட்டு வைக்காத ஜானு கிரேஸ்!
விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 96 படம் மாபெரும் வெற்றி பெற்றது. யதார்த்தமான திரைக்கதையும், அனைவரின் வாழ்க்கையையும் கனெக்ட் செய்கிற மேஜிக்கும் இந்த படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது.
இப்படத்தில் ஜானுவாக வரும் த்ரிஷா அணிந்த மஞ்சள் நிற சுடிதார், அனைவரையும் ஈர்த்தது. இந்நிலையில், தீபாவளி ஸ்பெஷல் கலெக்ஷனாகவும் ஜானு சுடிதார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புகைப்படத்தை நடிகை த்ரிஷா தனது ட்விட்டரில், பதிவிட்டு, கடைகளில் ஜானுவின் உடை வந்துவிட்டது என தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அமேசானில், கபாலி பொம்மைக்கு பிறகு 96 படத்தின் ராம் மற்றும் ஜானு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த ஆண்டு தீபாவளிக்கு பல ஜானுக்கள் வலம் வருவார்கள் என்பதை கிண்டல் செய்யும் விதமாக கார்ட்டூன் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அதனையும் த்ரிஷா இது மிகவும் க்யூட் என கமெண்ட் செய்துள்ளார்.