மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா! பாலியல் விவகாரம்
மத்திய வெளியுறவு இணையமைச்சர் எம்.ஜே. அக்பருக்கு எதிராக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் பெரிதானதை தொடர்ந்து மத்திய அரசுக்கு கடும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது, இந்த விவகாரத்தில் அக்பர் பதவி விலக வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்த நிலையில் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஜே.அக்பர்.
பாலியல் அவதூறு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த மைக்கல் ஃபலோன் பதவி விலகினார், இவரை தொடர்ந்து இந்தியாவில் மீடூ (#MeToo) என்ற ஹேஷ்டேக் மூலம் அமைச்சர் ஒருவர் பதவி விலகுவது இதுவே முதல்முறை.
பாஜகவை சேர்ந்த இணையமைச்சர் எம்.ஜே அக்பர் "த ஏசியன் ஏஜ்" பத்திரிக்கை ஆசிரியராக பணியாற்றிய போது தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக பத்திரிக்கையாளர் பிரியா ரமணி புகார் அளித்தார். எம்.ஜே. அக்பர் மீது 20 பெண் ஊடகவியலாளர்கள் பாலியல் புகார் அளித்தார்கள் இது பாஜக கட்சிக்கு பெரிய சிக்கலை உண்டாக்கி உள்ளது. 20 பெண்களும் தங்கள் புகாரில் உறுதியாக இருந்ததை தொடர்ந்து அக்பர் இன்று ராஜினாமா செய்தார்.
ராஜினாமா குறித்து பேசிய அக்பர்: "அமைச்சர் பதவியில் இருந்து விலகி குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வேன் என் மீது எந்த குற்றமில்லை என்று நிருபிப்பேன் என்றும் மேலும் அமைச்சராக வாய்ப்பு கொடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி" என்றும் கூறினார் எம்.ஜே.அக்பர்