விடுமுறை ஸ்பெஷல்: பிரெட் ரசகுல்லா செய்வது எப்படி?
இந்த பிரெட் ரசகுல்லா செய்து அசத்துங்கள் உங்கள் வீட்டில்.
தேவையானவை:
பிரெட் துண்டுகள் - 6 பால் - 2 அல்லது 3 டீஸ்பூன் சர்க்கரை - ஒரு கப் ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை பிஸ்தா (பொடியாக நறுக்கியது) - 1 டீஸ்பூன்.செய்முறை:
பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு மிக்ஸியில் பவுடராக அரைக்கவும். அதில் பாலை சில சில துளிகளாக விட்டு உருண்டை பிடிக்கும் பதத்துக்கு வரும்வரை பிசையவும். தேவையான அளவு உருண்டைகள் உருட்டி வைக்கவும். சர்க்கரையுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, ஏலக்காய்த்தூள் கலந்து வைக்கவும். பரிமாறுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன் செய்து வைத்த உருண்டைகளின் மீது சர்க்கரைப் பாகை ஊற்றி, பிஸ்தா பருப்பைத் தூவிப் பரிமாறவும்.