கோஸ்டா ரிகாவில் விமான விபத்து... 12 பேர் உயிரிழப்பு
மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிகாவில் தனியார் பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.
அவர்களுள் 10 பேர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இருவர் விமானிகள்.
விமானம், கடற்கரை நகரமான புண்டா இஸ்லிடாவுக்கு அருகே குனசாகெஸ்ட் தீபற்பத்தில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செஸ்னா 208 டர்போராப் ரக விமானம், சுற்றுலா பயணிகளை இயற்கை வளம் மிகுந்த பகுதிகளுக்கு அழைத்துச் செல்லும் உள்நாட்டு விமானமாகும்.
விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.