வடசென்னையில் விஜய் அஜித் ரெபரன்ஸ் உள்ளதா?
வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், ஆண்ட்ரியா என நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள வடசென்னை படம் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் களைகட்டி வருகிறது.
இந்த படத்தில் தளபதி விஜய்யின் ரெபரென்ஸ் வருகிறது. தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் டிவி பார்க்கும் போது, பூவே உனக்காக படம் ஓடுகின்றது. இந்த காட்சி வரும்போது, தியேட்டரில் தளபதி விஜய் ரசிகர்கள் ஆரவாரம் செய்து விசில் சத்தத்தை தெறிக்கவிடுகின்றனர்.
அதேபோல, இடைவேளையின் போது, துரோகம் இல்லடா விஸ்வாசம் என தனுஷ் சொல்லும் பன்ச் டயலாக், தல அஜித்தின் விஸ்வாசம் படத்தை ரெஃபரென்ஸ் செய்கிறது.
தல-தளபதி ரசிகர்களையும் வட சென்னை படத்தின் மூலம் தனுஷ் கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.