சண்டக்கோழி-2க்கு வந்த சோதனை

விஷால் நடிப்பில் வெளியாகவுள்ள சண்டக்கோழி பாகம் 2-ஐ 300 திரையரங்குகளில் திரையிடமாட்டோம் என சேலம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சண்டக்கோழி 2 நாளை உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 1000 திரையரங்குகளுக்கு மேலாக வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில் சேலம், தர்மபுரி, நாமக்கல், தஞ்சாவூர் ஆகிய மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இது தொடர்பான காரணத்தை விளக்கியுள்ள அவர்கள், "வடசென்னை திரைப்படத்தை தர்மபுரி நயன்தாரா உள்ளிட்ட 10 திரையரங்கில் திரைப்படத்தை திரையிட தயாரிப்பாளர்கள் மறுத்துள்ளனர். அங்கு உள்ள உரிமையாளர், பணியாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது."

"தவறான புகாரில் பெயரில் திரையரங்கு உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். திரையரங்கு சார்பில் எந்த தவறும் நடைபெறவில்லை, படம் பார்க்க வரும் வாடிக்கையாளர் செல்போன் மூலம் தான் எடுத்ததற்கு சான்றிதழ் பெற்றுள்ளோம்."

"திரையரங்குகள் மீது புகார் தெரிவித்து, புதுப்படங்களை தர மறுத்த விஷாலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 800 திரையரங்கு சேலத்தை 65 திரையரங்குகளில் சண்டக்கோழி 2 படம் திரையிடப்படாது" என அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

More News >>